9 மாதங்களுக்கு பின் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் வருகையை குஜராத் மக்கள் கொண்டாடினர்.
விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
அந்த டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.27 மணியளவில் டிராகன் விண்கலம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் சொந்த ஊரான மெஹ்சானா பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.