தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் உள்ள அரிய நாச்சியம்மன் கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளுடன் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம், கடையாத்துப்பட்டி கிராமத்தில் அரியநாயகி அம்மன் ஆலய மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.