பர்கூர் அருகே தேர்வு அறையில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசுப்பள்ளியில் 12 வகுப்பு மாணவி உயிரியல் தேர்வு எழுதச் சென்றுள்ளார். தேர்வு அறையில், ரமேஷ் என்பவர் மேற்பார்வையாளராக பணியில் இருந்துள்ளார்.
தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவி, தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.
மேலும், அதே அறையில் தேர்வு எழுதிய மற்றொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.