தென்காசியில் பெய்த கனமழையால் காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தரைத் தளமானது சுமார் 4 அடிக்குக் கீழ் தாழ்த்தப்பட்டு, அதிலிருந்த மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தென்காசியில் வெளுத்த வாங்கிய கனமழையால், காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. சுற்றுப் பிரகாரத்தில் மண் அள்ளப்பட்டதே மழை நீர் தேங்குவதற்குக் காரணம் எனப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.