செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், காப்புக்காட்டின் எல்லையில் கொட்டப்படுகின்றன.
இந்தக் குப்பைகளை அங்குச் சுற்றும் மான்கள் உண்பதால், அவை உடல் உபாதைகளைச் சந்திப்பதும், இறப்பதும் தொடர் கதையாகி வருவதாக வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தமலையில், காப்புக்காடு பகுதியில் உள்ள வன விலங்குகள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.