கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மயக்க நிலையில் காணப்பட்ட மயிலை மீட்டு அப்பகுதியினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்திராபுரி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் பூக்களின் உதிர்வைத் தடுக்க விவசாயிகள் பூச்சி மருந்தை அடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த மயில்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மயக்கமடைந்த 2 மயில்களை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.