ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்கும் நிலையில், இதில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுசி பேட்ஸ் தலைமையில், ஈடன் கார்சன், சோஃபி டிவைன் உள்ளிட்ட 13 வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இந்த தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.