பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி, 13 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.