இந்தியா AI மிஷன் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் மத்திய அமைச்சர்,
அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அஷ்வினி வைஷ்ணவ், கேட்ஸ் அறக்கட்டளை உடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்தார்.