சுவாமிமலை முருகன் கோயிலில் ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட மின் தூக்கி கட்டுமான பணி ஐந்து சதவீதம் கூட நடைபெறாத நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான்காம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோயிலில் மின் தூக்கி வசதி அமைப்பதற்கான பூமி பூஜையைக் கடந்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஓராண்டுக் காலம் நெருங்கியும் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் வெறும் ஐந்து சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
இந்த நிலையில் சுவாமிமலை முருகன் கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என இந்து அறநிலையத் துறை சேகர்பாபு கூறியிருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.