சிவகங்கை பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் ஒட்டப்பட்டது.
டாஸ்மாக் மெகா ஊழலுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் சுவரில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் ஒட்டப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு பாஜக மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் ஹேமா மாலினி பீட்டர், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.