சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்ற காரை உரியக் காரணம் இன்றி போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இளையான்குடி பகுதிக்குள் சென்றபோது காரை மறித்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து காரை விட்டு கீழே இறங்கிய ஹெச்.ராஜா தடுத்ததற்கான காரணம் கேட்டபோது போலீசார் பதிலளிக்க மறுத்துள்ளனர். இதனால் அவர்களுடன் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அப்பகுதி மக்கள், தான் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத போது காவல்துறை ஏன் தடுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி அவ்வழியாக தனது காரில் ஹெச்.ராஜா பரமக்குடி நோக்கி பயணம் மேற்கொண்டார்.