பஞ்சாப் ஹரியானா எல்லையில் போராட்டத்திற்கு விவசாயிகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை போலீசார் அகற்றினர்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப் ஹரியானா எல்லையான சம்பு பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர்.
இந்நிலையில் போலீசார் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கூடாரங்களை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் கைது செய்தனர்.
அசம்பாவிதங்களை தடுக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.