அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், 8 பேர் காயம் அடைந்தனர்.
சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 8 பேர் காயமடைந்தனர்.