கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள சீளியூர் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம், தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயி திருமயம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 130 தென்னை மரங்கள் இருந்த நிலையில், அதில் 60-க்கும் மேற்பட்ட மரங்களை காட்டு யானைகள் நாசம் செய்தன.
இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.