பெங்களூருவில் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அகில பாரத செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி வரும் அக்டோபர் மாதத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதால் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
அந்த வகையில், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், கூட்டத்தில் வங்கதேச விவகாரம் மற்றும் நூற்றாண்டு கால ஆர்எஸ்எஸ் பயணம் தொடர்பாக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, ஏபிவிபி நிர்வாகி ராஜ் ஷரன், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி அலோக் வர்மா மற்றும் 32 அமைப்பினர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.