சிறு வர்த்தகர்களிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான யுபிஐ பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சிறு வணிகர்ளின் நலன் கருதி கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்தின்கீழ், ஒருவர் யுபிஐ வாயிலாக பணம் செலுத்தும்போது அதற்கான வணிக சலுகை வீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் திட்ட நடைமுறைக்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார்.
2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக யுபிஐ மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இதன் மூலம் பயன்பெற முடியும் எனக்கூறிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
இதற்காக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பூஜ்ஜியம் புள்ளி 15 சதவீத அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.
இதுதவிர அசாம் மாநிலத்தில் பத்தாயிரத்து 601 கோடி ரூபாய் மதிப்பில் உர உற்பத்தி வளாகம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அவர் தெரிவித்தார்.