இந்திய வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், எப்போதும் போல் , பில் கேட்ஸுடனான சந்திப்பு சிறப்பான வகையில் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிடடுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு சென்ற கேட்ஸ், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.