இந்திய இரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் 600 கோடி லிட்டர் டீசலை மிச்சப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார மயமாக்கலில் இந்திய இரயில்வே நல்ல முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், கார்பன் வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இரயில்வே அமைச்சகத்தின் தகவலின்படி இந்த கார்பன் வாயு குறைப்பு சுமார் 16 கோடி மரங்களை நடுவதற்குச் சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க மேலும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது.