மெசிடோனியாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மெசிடோனியாவில் உள்ள கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள பார்களின் கண்ணாடிகளை உடைத்தும், கார்களை கவிழ்த்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர்.