ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஸ்பெயினின் வலேன்சியா, அன்டலுசியன் மாகாணங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது.
இதனால் வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், வீடுகளிலிருந்த பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன.
பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில், தாழ்வான பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்பெயினில் கனமழைக்கு ஒருவர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.