தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பகவதி அம்மன் கோயிலின் இரண்டாம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வடகரை பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கோயில் விழாவையொட்டி, தீச்சட்டி ஏந்தியும், சிறுவர்கள் சிலம்பும் சுற்றியும் வீதி உலா சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.