கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
ராச்சமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர், அனிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பாபு அனிதாவைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சப்பாத்தி கட்டையால் மனைவியை அடித்து பாபு கொலை செய்தார். பின்னர் காவல்நிலையத்தில் சரணடைந்த அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.