பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வந்த மாடல் அழகி மற்றும் ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டனர்.
கொச்சி வந்தடைந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி மான்வி சவுத்ரி மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகியோர் 15 கிலோ கலப்பின கஞ்சாவைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.