இந்தோனேசியாவில் வீசிய சூறாவளிக் காற்று மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
பாலி நகரின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசிய நிலையில், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பலமாக வீசிய காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், உயிருக்கு அஞ்சி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.