ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஜான், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஜானை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே இந்த கொலையில் தொடர்புடைய சலீம் மற்றும் ஜீவகன் ஆகிய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கொல்லப்பட்ட ஜானின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.