தேனி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தேனி மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பூட்டப்பட்டிருந்த குடோனை திறந்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தியதில், 40 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.