திமுக கூட்டணி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து இரண்டு அவைகளிலும் பங்கேற்றனர். மக்களவையில் திமுக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவை விதிகளை மீறி தமிழக எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
மக்களவையின் அவைக் குறிப்பில் உறுப்பினர்கள் பெயர் எதுவும் இடம்பெறாத நிலையில் திருச்சி சிவா, கனிமொழி சோமு உள்ளிட்ட எம்.பி.க்களின் பெயர்களை மாநிலங்களவை செயலகம் குறிப்பிட்டுள்ளது.