சென்னை பூந்தமல்லி முதல் முல்லை தோட்டம் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்ல மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் . ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைடுத்து அதிகாரிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.