சென்னை கிண்டியில் தப்பியோட முயன்ற ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கடந்த வாரம் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட கூலிப்படையை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு பின்னணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஐகோர்ட் மகாராஜா இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, திருநெல்வேலியில் வைத்து ரவுடி மகாராஜாவை கைது செய்து தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். கிண்டி அருகே வந்தபோது போலீசாரை தாக்கிவிட்டு மகாராஜா தப்பியோட முயன்ற நிலையில், அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
இதில் காலில் காயமடைந்த ரவுடி மகாராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.