அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கல்வித்துறையின்கீழ் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மற்றும் 34 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கல்வித் துறையைக் கலைத்து அனைத்து நிர்வாகத்தையும் மாகாண அரசிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளாத வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கான நிதியையும், சிறப்பு மாணவர்களுக்கான திட்டங்களையும் அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் கூட்டத்தில், கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.