வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது வட மாநிலங்களில் பன்றிகளை போன்று அதிக குழந்தைகளை பெற்று கொள்வதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பெண்கள் குறித்து அமைச்சர் இழிவாக பேசியது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த நிகழ்ச்சியில், சில்வர் பாத்திரங்கள், தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை பெற பெண்கள் முண்டியடித்து கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே தாமோ.அன்பரசன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.