லண்டனின் ஹீத்ரு விமான நிலையம் அருகேயுள்ள மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உலகின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரு விமான நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், விமான நிலையத்துக்கு மின்வினியோகம் வழங்கும் மின் நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டது.
10 தீயணைப்பு வாகனங்களில், 70 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுப்புரங்களில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகைமண்டலாக காட்சியளித்தது.