திருப்பதி மலையில் தங்குவதற்காக அறை பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இருவர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது மகனுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அறைகள் ஒதுக்கீடு செய்யும் சிஆர்ஓ அலுவலகம் அருகே அமர்ந்திருந்தபோது, அவரது மகனை கோவிந்தராஜன் என்பவர் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கார்த்திகேயன், கோவிந்தராஜன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கார்த்திகேயன் தாக்கியதில் கோவிந்தராஜன் தரப்பினருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.