ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியலில் 82 லட்சத்து 20 ஆயிரத்து ரூபாய் ரொக்கம், 388 கிராம் தங்கம், 527 கிராம் வெள்ளி ஆகியவற்றைப் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர்.
மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து ஓரிரு தினங்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். அதன்படி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 20 உண்டியல்கள் கோயில் செயல் அலுவலர் மேனகா தலைமையில் திறக்கப்பட்டுக் கணக்கிடப்பட்டன.
உண்டியல் எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.