திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மொத்தமாகப் புறக்கணித்தனர்.
இங்குள்ள 36 வார்டுகளிலும் எந்தவிதமான நலத்திட்டப் பணிகளையும் செய்யாமல் மெத்தனமாகச் செயல்படும் திமுக நகர மன்ற தலைவரையும் நகராட்சி ஆணையாளரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அனைவரும் ராஜினாமா செய்வோம் எனவும் கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.