விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்படும் தமிழ்நாடு கிராம வங்கியில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த ஆறுமுக வேலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
ஆறுமுகவேலனுக்கு நிறையக் கடன் பிரச்சனை இருந்ததாகவும் இதனால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.