ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பேரன் தேவான்ஷ் பிறந்த நாளையொட்டி தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகளுடன் சந்திரபாபு நாயுடு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் அவருக்குத் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னதான கூடத்திற்குச் சென்ற அவர், ஒருநாள் அன்னதான செலவாக 44 லட்சம் ரூபாயை வழங்கினார். பின்னர், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.