ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த வாகன விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சென்னை பல்லாவரத்திலிருந்து 17 பேர் ஒகேனக்கலுக்குச் சுற்றுலா செல்ல வேனில் புறப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேனின் முன்பக்க டயர் வெடித்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதேபோன்று, செங்கிலிகுப்பம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
மேலும், விண்ணமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 சாலை விபத்துகள் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.