மதுரையில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினரை காவல்துறை கைது செய்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அண்மையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், டாஸ்மாக் கடைகளின் முன்பு முதலமைச்சர் ஸ்டாலினின் படத்தையும் அவர்கள் ஒட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படம் ஒட்டப்பட்டது.
இது தொடர்பாக மதுரை பாஜக கிழக்கு மாவட்டம் மண்டல தலைவர் வைரமுத்து உள்ளிட்ட 13 பேரை காவல்துறை கைது செய்தனர்.
இதேபோன்று, புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினரை காவல்துறை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 7 பேரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.