மதுரை கீழவாசல் அருகே அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, கீழவாசல் பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது பேருந்திலிருந்து இறங்கிய மூதாட்டி பேருந்துக்கு முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
மூதாட்டியைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது பேருந்து சக்கரம் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.