வேலூர் அருகே கேஸ் கட்டர் மூலம் கதவை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது மகளின் திருமணத்திற்கான உடைகளை வாங்க வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் கதவை கேஸ் கட்டர் மூலம் உடைத்து, பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.