பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
அப்போது அங்குப் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு ராணுவ அதிகாரி மரணம் அடைந்தார்.
தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.