ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தினமும் காலை உணவு வழங்கவுள்ளதாக அறிவித்த யூடியூபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உலகின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட் பல மில்லியன் ஃபாலோயர்களை கொண்டவர். இவர் அண்மையில் ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் அறிவித்தார். இதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் மாணவர்கள் கோகோ தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் மாறும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.