இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 நகரங்களிலும் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் தொடக்க விழாவில் முக்கிய பிரபலங்களும், பாடகர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள சென்னை, மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.