கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும், மரியாதையும் பிற விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
சேலம் விநாயகா மிஷன் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாரியப்பன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அவர், விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், வெற்றி மேல் வெற்றி கண்டாலும் கவனத்துடன் கர்வம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டால் சாதிக்கலாம் என தெரிவித்தார்.