அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது. ‘
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகளை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற வேண்டும்.
இருப்பினும், யு.ஜி.சி.யின் சட்ட விதிகளுக்கு முரணாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு சென்றது. எனவே யு.ஜி.சி. சட்ட விதிகளுக்கு முரணாக உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.