திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது.
சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய போதும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.
இதனால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ தேவி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.