தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கூட்டிய தமிழக அரசை கண்டித்து, சென்னை அக்கரை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, தமிழக அரசு நடத்தும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கண்டித்து, முதலமைச்சர் ஸ்டாலின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டியும், சென்னை அக்கரை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.