கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஆயிரத்து 248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக கவுன்சிலர் ஜீவன், இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுக் குடியிருப்பு வாசிகளின் உடல்நலம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.